Saturday, December 13, 2008
சென்னைக்கு அருகில் மகிந்த, சரத் கொடும்பாவிகள் ஊர்வலமாக இழுத்து வரப்பட்டு எரிப்பு
டிசம்பர் 12 - இன்று சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சிங்கள இனவெறியன் மகிந்த இராஜபக்சே, சரத் பொன்சேகாவா ஆகியோரின் உருவ பொம்மைகளை பாடைகட்டி, பறை முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து எரித்தனர். இதில் பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் இந்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர். 'இந்திய பிரதமர்' மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவும் மக்கள் போராட்டங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று சிறிலங்கா அரச படைத் தளபதி சரத் பொன்சேகாவா திமிராக பேசியுள்ளான்.. இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவுபடுத்துவதாகும்.
சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இனவெறி அரசப்படை தளபதி பொன்சேகாவா ஆணவமாக தனது இனவெறியை கக்கியுள்ளான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள். எனவே,
• தமிழர்களை இழிவுபடுத்திய சிங்கள இனவெறி அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் !
• சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் !
• தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் !
• விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் !
• சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது !
• சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் !
• இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் !
என வலியுறுத்தி சென்னையை அடுத்த பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இனைந்து சரத் பொன்சேகாவா , மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை எரித்தனர்.
இன்று 12.12.2008 காலை 10:00 மணியளவில் பொன்னேரி நகரின் பழைய பேரூந்து நிருத்தத்தில் இருந்து மகிந்த- சரத் ஆகியோரின் உருவ பொம்மைகள் பாடைகட்டி புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக எடுத்துவந்து எரிக்கப்பட்டது. போராட்டத்திற்கு தோழர். மாறன் (பு.இ.மு) தலைமை வகித்தார். ஒ.ம.வி.மு தமிழரசு , பு.இ.மு அறிவுமதி ,பு.தொ.மு நிலவழகன் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஈமச் சடங்குக்குரிய முறையில் பறை முழக்கம் கொட்டப்பட்டது. மேள வாத்தியங்கள் முழங்கப்பட்டன. மகிந்த-சரத் உருவ பொம்மைக்கு சவ ஊர்வலம் நடத்தப்பட்டது. பெண்கள் சிறுவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் ஈழப்போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி:மணிவண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment