Saturday, December 13, 2008

சென்னைக்கு அருகில் மகிந்த, சரத் கொடும்பாவிகள் ஊர்வலமாக இழுத்து வரப்பட்டு எரிப்பு
















டிசம்பர் 12 - இன்று சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சிங்கள இனவெறியன் மகிந்த இராஜபக்சே, சரத் பொன்சேகாவா ஆகியோரின் உருவ பொம்மைகளை பாடைகட்டி, பறை முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து எரித்தனர். இதில் பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் இந்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர். 'இந்திய பிரதமர்' மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவும் மக்கள் போராட்டங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று சிறிலங்கா அரச படைத் தளபதி சரத் பொன்சேகாவா திமிராக பேசியுள்ளான்.. இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவுபடுத்துவதாகும்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இனவெறி அரசப்படை தளபதி பொன்சேகாவா ஆணவமாக தனது இனவெறியை கக்கியுள்ளான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள். எனவே,

• தமிழர்களை இழிவுபடுத்திய சிங்கள இனவெறி அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் !
• சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் !
• தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் !
• விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் !
• சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது !
• சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் !
• இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் !

என வலியுறுத்தி சென்னையை அடுத்த பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இனைந்து சரத் பொன்சேகாவா , மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை எரித்தனர்.

இன்று 12.12.2008 காலை 10:00 மணியளவில் பொன்னேரி நகரின் பழைய பேரூந்து நிருத்தத்தில் இருந்து மகிந்த- சரத் ஆகியோரின் உருவ பொம்மைகள் பாடைகட்டி புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக எடுத்துவந்து எரிக்கப்பட்டது. போராட்டத்திற்கு தோழர். மாறன் (பு.இ.மு) தலைமை வகித்தார். ஒ.ம.வி.மு தமிழரசு , பு.இ.மு அறிவுமதி ,பு.தொ.மு நிலவழகன் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஈமச் சடங்குக்குரிய முறையில் பறை முழக்கம் கொட்டப்பட்டது. மேள வாத்தியங்கள் முழங்கப்பட்டன. மகிந்த-சரத் உருவ பொம்மைக்கு சவ ஊர்வலம் நடத்தப்பட்டது. பெண்கள் சிறுவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் ஈழப்போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


செய்தி:மணிவண்ணன்

Wednesday, December 10, 2008

ராஜபக்சே, சரத் பொன்சேவா கொடும்பாவி எரிப்பு

சிங்கள இனவெறி போரை தடுத்து நிறுத்தக் கோரியும்,தமிழீழ ஆதரவாளர்களை கோமாளிகள் என இழிவு படுத்திய கொடுங்கோலன் ராஜபக்சே, பொன் சேகாவா கொடும்பாவி எரிப்பு!









சிங்கள இனவெறி போரை தடுத்து நிறுத்தக் கோரியும்,
தமிழீழ ஆதரவாளர்களை கோமாளிகள் என இழிவு படுத்திய
கொடுங்கோலன் ராஜபக்சே, பொன் சேகாவா கொடும்பாவி எரிப்பு!

சென்னை, டிச. 10- ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவு படுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சே மற்றும் சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.

சமீபத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், அங்கே போர் நிறுத்தம் செய்ய ‘இந்திய பிரதமர்’ மன்மோகன் சிங்கிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று இலங்கை அரசின் இராணுவ தளபதி சரத் பொன் சேகாவா திமிராக பேசியுள்ளான். இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவு படுத்துவதாகும்.

இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில் நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆணவமாகப் பேசியிருக்கிறான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள். எனவே,
* தமிழர்களை இழிவு படுத்திய சிங்கள இனவெறி அரசின் ராணுவத் தளபதி சரத் பொன் செகாவா மன்னிப்பு கோர வேண்டும்.
* சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
* தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.
* சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.
* சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
* இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூட வேண்டும்.
என வலியுறுத்தி பொன் சேகாவா, ராஜபக்சேவின் கொடும்பாவிகளை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.

10-12-2008 காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் சீராளன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன் சேகாவா ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சிங்கள அரசுக்கு எதிராகவும், இந்திய அரசு இலங்கை அரசுடனான உறவைத் துண்டிக்கக் கோரியும், போரை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட பு,இ,மு, தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.
செய்தி : மணிவண்ணன்

Tuesday, December 9, 2008

ராஜபக்சே வருகையை கண்டித்து 11 கிராமங்களில் கடையடைப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர் .

ராஜபக்சே வருகையை கண்டித்து 11 கிராமங்களில் கடையடைப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
நவம்பர் 12
சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து சத்தியமங்கலம் அருகே 11 கிராமங்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தியது. மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்றிரவு டெல்லி வந்தார். அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று பொது கடையடைப்பு நடத்த புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து தூக்கநாயக்கன்பாளையம், பங்களாபுதூர், கொங்கல்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர், பள்ளத்தூர், துரையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், புளியம்பட்டி, ஏழூர் ஆகிய 11 கிராமங்களில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. துரையம்பாளையத்தில் காலையில் சில கடைகள் திறந்திருந்தன. அவற்றை மூடச் சொல்லி புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயி தொழிலாளர் முன்னணி சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தூக்கநாயக்கன்பாளையம் மகளிர் உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: கபிலன்

Thursday, December 4, 2008

சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்திய துணைகண்டத்திற்குள் நுழைவதை கண்டிக்கும் சுவரொட்டிகள்


நவ -2008

ஈழத்மிழர்கள் மீதான சிங்கள இனவெறி போரை உக்கிரப்படுத்தவும், இராணுவ தளவாடங்களை பெறவும் சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்திய துணைகண்டத்திற்குள் நுழைவதை கண்டிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புகள் இனணந்து தமிழகம் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர். அதில் ஒரு பகுதியாக சென்னையில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பல்லாயிரக்கணக்காண சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர்.

இந்திய அரசைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி

செங்குன்றம்
பொன்னேரி

திருவொற்றியூர்

பொன்னேரி

சென்னை
பல்லாவரம்
ஆவடி
சிங்கள அரசுக்கு உதவி:
இந்திய அரசைக் கண்டித்து புரட்சிகர
அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக்.24-
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு பணம், ஆயுதம், தொழில் நுட்பம் போன்ற உதவிகளை இந்திய அரசு செய்துவருவதைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகள் நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
இன அழிப்புக்கு இந்தியா உதவி
சிங்கள அரசு இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக இன அழிப்புப்போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனால் ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் உள்நாட்டிலேயே அகதிகளாக கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சிங்கள அரசின் இந்த இன அழிப்புப் போருக்கு இந்திய அரசும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. பணம், ஆயுதம், தொழில் நுட்பம் மற்றும் ராணுவ தளபதிகளையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது சமீபத்தில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இந்திய அரசின் உதவியால்தான் சிங்கள அரசு இப்படி இன அழிப்புப்போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என தெரிகிறது.

புரட்சிகர அமைப்புகள் போராட்டம்
சிங்கள இனவெறியன் இராஜபக்சேவுடன் கூட்டுச்சேர்ந்து
தமிழினத்தை கொன்றுகுவிக்கும் அமெரிக்க கைக்கூலி
மன்மோகன் சிங்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

( தமிழகம் தழுவிய இயக்கம் )


24.10.2008 அன்று காலை 11 மணியளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

24.10.2008 அன்று காலை 11 மணியளவில் சென்ட்ரல் மெமோரியல் அரங்கம், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர், பல்லாவரம், செங்குன்றம், பொன்னேரி, அரும்பாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அனைத்து இடங்களிலும் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கி 1 மணி வரை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய அரசே! சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை வழங்காதே! இலங்கையிலிருக்கும் இந்தியப் படைகளை திரும்பப் பெறு! தமிழ் ஈழத்தை அங்கீகரி! என முழக்கங்கள் ஏழுப்பினர்.

இந்த ஆர்ப்பட்டங்களில் பேசியவர்கள் சிங்கள இனவெறி அரசு, அங்கு இன அழிப்புப் போரை நடத்திவருவதையும், இதனால் அங்குள்ள தமிழர்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருவதையும் பட்டியலிட்டுப் பேசினார்கள். மேலும் இந்தியப்படையைச் சேர்ந்த 265 இந்திய ராணுவத்தினர் இலங்கையில் நடக்கும் இந்த தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டு வருவதை கண்டித்தார்கள். அவர்களை திரும்பப் பெற வேண்டும், இலங்கை அரசுக்கு எந்தவித ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்புவதை தடை செய்யக் கூடாது என்றும் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களின் குழந்தைகளோடு கலந்து கொண்டனர்.
செய்தி : பாலு

சட்டக் கல்லூரி மாணவர்களி்ன் பிரச்சினை- புரட்சிகர மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !




சட்டக் கல்லூரி மாணவர்களி்ன் பிரச்சினைக்கு காரணமான
ஆதிக்க சாதிச் சங்கங்களை தடை செய்! புரட்சிகர மாணவர் முன்னணி,
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் !

1-12-2008 காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பிரச்சினைக்கு அங்கு செயல்பட்டு வரும் ஆதிக்கச் சாதி சங்கமே காரணம். எனவே அச்சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புரட்சிகர மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.கடந்த 12/11/2008 அன்று சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலை அடுத்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கொடூர மனம் படைத்தவர்கள், மனித நேயமற்றவர்கள் என்று கருத்து பரப்பப்பட்டு வருகிறது.இந்த கருத்துக்களின் பின்னணியில் இருப்பது உயர் சாதி வெறியாகும்.சட்டக் கல்லூரியில் 'முக்குலத்தோர் மாணவர் பேரவை'என்ற ஆதிக்கச் சாதி சங்கத்தை நடத்தி வருபவர்கள்தான் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை ஆகிய மூவரும். இவர்கள் கிரிமினல் குற்றப் பின்னனி கொண்டவர்கள்.இவர்களில் பாரதி கண்ணன் மீது மட்டும் 17 புகார்கள் உள்ளன. மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணன் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரிடமிருந்து 3கொடுவாள்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. 3 மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணன் சிலருடன் சேர்ந்து புரசை சட்டக் கல்லலூரி விடுதிக்குள் புகுந்து சன்னல்,மின் விளக்கு ஆகியவற்றை உடைத்து நொறுக்கியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 30-ல் தேவர் குரு பூஜையின் போது சாதி வெறியை தூண்டும் வகையில் முக்குலத்தோர் மாணவர் பேரவை சார்பாக சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில் "டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி" என்பதில் 'டாக்டர் அம்பேத்கர்' பெயரை மட்டும் திட்டமிட்டே நீக்கியுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களை தாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் 3ல் ஒடுக்கப்பட்ட மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்துள்ளனர்.மீறியவர்களைத் தாக்கியுள்ளனர். இதன் உச்சக் கட்டமாக 12-11-2008 அன்று சித்திரைச் செல்வன் என்ற மாணவர் தலையிலும் காதிலும் கத்தியால் தாக்கியுள்னர். இதன் பிறகே ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சாதி ஆதிக்க உணர்வுகள் கல்லூரிக்குள் தலைதூக்கும்போதே தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கல்லூரி நிர்வாகமும் அதைக்கண்டு கொள்ளாமல் இருந்ததுடன் சாதிச் சங்கத்திற்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்கின. இதன் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.எனவே மாணவர்கள் நடுவில் மீண்டும் வன்முறை நிகழாமல் இருக்க, சிக்கலுக்குக் காரணமான ஆதிக்க சாதிச் சங்கத்தை தடை செய்ய வேண்டும்; மாணவர் நடுவில் சாதி வெறியைத் தூண்டிய சாதி ஆதிக்க வெறிபிடித்த மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கம் செய்ய வேண்டும்;.கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் அவர்களை மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி (01-12-2008) சென்னை காலை 11 மணியளவில் மெமோரியல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த தோழர் கபிலன் தலைமை தாங்கினார். சிறப்புரையாக பு.மா.மு. அமைப்பைச் சேர்ந்த தோழர் ராயர், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர். தமிழரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி : கபிலன்

Wednesday, December 3, 2008

உத்தபுரம் துப்பாக்கி சூடு – நெல்லை கண்ணநல்லூர் மாரியம்மன் கோவிலில் தீண்டாமையைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டம்.


தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம், உத்தபுரத்தில் சாதிதீண்டாமைக்கு எதிராக போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தமிழகபோலீசு துப்பாக்கி சூடு நடத்தியது,இதில் சுரேஷ் என்ற தாழ்த்தப்பட்டஇளைஞர்சுட்டுக் கொல்லப்பட்டார். அது மட்டுமில்லாது தாழ்த்தப்பட்டமக்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது.

மற்றொருபுரம் நெல்லை மாவட்டம், கண்ணநல்லூர் கோயிலுக்குசென்று வழிபட உரிமைகள் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதி தீண்டாமை கொடுமைகள்நாள்தோறும் நடந்தேறி வருகிறது. இதை கண்டித்து 18-11-2008 அன்றுமாலை 6.00 மணியளவில் சென்னையை அடுத்த பொன்னேரியில்ஹரிகரன் கடைவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்2000க்கும் மேற்பட்ட பெணகள், சிறுவர்கள், ஆண்கள் ஆகியோர்கலந்து கொண்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைசார்ந்தவர்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

தலைமை : மாறன் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி),
வரவேற்புரை : முகிலன் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி),
சிறப்புரை: தோழர் தமிழரசு (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி), தோழர் அறிவுமதி (புரட்சிகர இளைஞர் முன்னணி), தோழர் கா.வெள்ளைச்சாமி (பெ.தி.கழகம்), தோழர். ராஜா (பகுஜன் சமாஜ் கட்சி), தோழர். அ.ஏ.பொன்செல்வன் வழக்குரைஞர், தோழர். லெனின் வழக்குரைஞர், தோழர்.சந்திரசேகர் (புரட்சிபாரதம்), நன்றியுரை தோழர். நிலவழகன் கூறினார்.

தீர்மானம் :
1) சாதி ஆதிக்கவாதிகளை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் !
2) தாழ்த்தப்பட்ட இளைஞரை சுட்டுக்கொன்ற போலீஸ் கும்பலை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது !




செய்தி: கபிலன்